Mnadu News

வாரிசு பாடல்கள் மாஸாக இருக்கும்! டுவீட் செய்த ஜானி மாஸ்டர்!

தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் படம் “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. முதல் முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா இப்படத்தின் மூலம் விஜய்யுடன் இணைகிறார். இவர்களோடு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார்கள்.

2023 பொங்கலுக்கு வெளியிட தயாராகி வரும் படக்குழு இதன் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

அதோடு, அரபிக் குத்து பாடல் புகழ் நடன கலைஞர் “ஜானி” நேற்று டிவிட்டரில் ஒரு மாஸ் செய்தியை டுவீட் செய்துள்ளார். அதில் வாரிசு படத்தை ரசிகர்களாகிய நீங்கள் சீட்டில் அமர்ந்து பார்க்க மாட்டீர்கள் பாடல்கள் அனைத்தும் உங்களை ஆட்டம் போட வைக்கும் என கூறி ரசிகர்களை வெறி ஆக்கி உள்ளார். இதனால் தளபதி ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மஜாவில் உள்ளனர்.

Share this post with your friends