விண்ணை தாண்டி வருவாயா, கோ, மைனா, மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அண்ணாத்த, பீஸ்ட், விக்ரம், டான் என பிளாக் பஸ்டர் திரைப்படங்களை வெளியிட்டு கடந்த 15 வருடங்களாக வெற்றிகரமான தயாரிப்பு மற்றும் வெளியிட்டு நிறுவனமாக உள்ளது ரெட் ஜெயன்ட் குழுமம்.
இந்த வெற்றி படங்களின் வரிசையில் உள்ளது வெளியாக இருக்கும் “துணிவு” திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல மாஸ்டர், காத்து வாக்குல ரெண்டு காதல், மகான் போன்ற படங்களை தயாரித்து வெற்றி பட தயாரிப்பு நிறுவனமாக உள்ளது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ். சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படம் படுதோல்வி அடைந்து பெரும் அளவில் லாசை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விஜய் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனர் லலித்தை அழைத்து வாரி வழங்கி உள்ளார் வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு வாய்ப்பை. இதனால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார் லலித்.