Mnadu News

வாழும் வரலாறு: அமிதாப் பச்சனுக்கு முதல் அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து .

நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எண்பது வயதை அடைந்துள்ள வாழும் வரலாறு, இந்தியத் திரையுலகின் மிகப்பெரும் அடையாளச் சின்னமாம் அமிதாப் பச்சனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தங்களது தனிச்சிறப்புமிக்க கலைப்பண்புகள் இனி வரும் காலங்களிலும் இந்தியத் திரையுலகில் செல்வாக்கு செலுத்தி, ரசிகர்களை மேலும் பல பத்தாண்டுகள் தன்வயப்படுத்தி மகிழ்வித்திட வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends