Mnadu News

விசாகப்பட்டினம் செல்கிறார் பிரதமர் மோடி.

400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு பிரதமர் மோடி. துறைமுக நகருக்கு வருவதாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அன்றைய தினம் அவர் மத்திய அரசின் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.
அதோடு, 26 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஹெச்பிசிஎல் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம், ஐஐஎம் விசாகப்பட்டினத்தின் நவீன பசுமையான புதிய வளாகத்தின் முதல் கட்டம் மற்றும் விசாகப்பட்டினத்தில் கப்பல் முனையம் ஆகியவற்றையும் அவர் திறந்துவைக்க உள்ளார்.
ஏ.யூ பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேச உள்ளார் என வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆளுநர் பிஸ்வ பூஷன் ஹரிசந்தன், முதல் அமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் பிரதமருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
,பிரதமரின் வருகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அ.மல்லிகார்ஜுனா, விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் ராஜபாபு மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாநிலங்களவை உறுப்பினர் ஜிவிஎல் நரசிம்மராவ் சமீபத்தில் பிரதமரை சந்தித்து, பல வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களைத் துவக்கி வைப்பதற்கும், அடிக்கல் நாட்டுவதற்கும் விசாகப்பட்டினத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends