Mnadu News

“விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்”: மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பேட்டி.

உச்ச நீதிமன்றத்தின் வலியுறுத்தலைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் மீது டெல்லி கனோட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சில மணி நேரங்கள் கழித்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண்,நான் நிரபராதி, எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார்.அதேபோல், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவும் தயாராக இருக்கிறேன்.ஏனெனில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை நான் மதிக்கிறேன்.அதே நேரம், எனக்கு நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது. நான் பதவி விலகுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் நான் குற்றவாளி இல்லையே. இப்போது நான் பதவி விலகினால் அவர்களின் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டது போலாகி விடும். கிட்டத்தட்ட என்னுடைய பதவிக் காலம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது.அத்துடன், அரசாங்கம் 3 நபர்கள் குழுவை அமைத்திருக்கிறது. இன்னும் 45 நாட்களில் தலைவருக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் முடிந்ததும் என்னுடைய பதவிகாலம் முடிந்து விடும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends