Mnadu News

விஜய்க்கு வில்லனாகும் கே ஜி ப் வில்லன்! யார் தெரியுமா?

மாநகரம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ஆளுமைகளை தன் பக்கம் இழுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்துக்கு பிறகு இவர் இயக்கிய கைதி படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கவே. கோலிவுட் இன் கவனம் இவர் பக்கம் சாய்ந்தது எனலாம்.

இந்த படங்களை பார்த்த நடிகர் விஜய் இவரை பாராட்டி ஒரு கதை தனக்காக ரெடி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அது தான் மாஸ்டர் இதுவும் பிரம்மாண்ட ஹிட் அடிக்கவே.

உலக நாயகனுக்கு ஒரு கதை செய்து அதில் அவர் நடிக்க வேண்டும் என்ற பேராவல் லோகி இடம் இருந்தது. அது தான் விக்ரம், 700 கோடிகள் வசூல் வேட்டை நடத்திய படம் இது. தற்போது, மீண்டும் விஜய் உடன் இவர் இணைந்து பணியாற்ற உள்ள படம் தான் விஜய் 67.

தற்போது, இப்படத்தின் கதை மற்றும் லொகேஷன் பார்க்கும் படலம் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என அனைவரும் எதிர்நோக்கி வரும் நிலையில், படத்தின் வில்லனாக சஞ்ஜய் தத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதற்காக சஞ்ஜய் தத்க்கு பல கோடிகள் சம்பளம் பேசப்பட்டு அடவான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this post with your friends