தளபதி விஜய் – அட்லீ கூட்டணியில் வெளியான மூன்று படங்களுமே அடுத்தடுத்து விஜய்க்கும் சரி, அட்லீக்கும் சரி தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை பெற்று தந்தது. வசூல் ரீதியாக மிக பெரிய அளவில் கல்லாகட்டிய இப்படங்கள் மூலம் அட்லீ டாப் ஐந்து இயக்குனர்கள் இடத்துக்கு சென்று விட்டார்.
தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் பிஸியாக உள்ளார். அதே நேரத்தில், அட்லீ ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் படு பிஸியாக உள்ளார்.
இதை முடித்த கையோடு தேனாண்டாள் பிலிம்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் விஜய் நடிப்பில் ஒரு படம் எடுக்கப்பட உள்ளது. அது விஜய்யின் 68 வது படமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் சுமார் 300 கோடி பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.