Mnadu News

மொத்த வித்தைகளையும் ஒரே படத்தில் இறக்கும் விஜய் ஆண்டனி! எந்த படம் தெரியுமா?

சின்னத்திரையில் இசையமைப்பாளராக தன் கலை பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, விஜய் நடித்த சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பலரின் படங்களுக்கும் இசையமைத்து உச்சத்தில் இருந்தார்.

தீடீரென்று, 2012 ஆம் ஆண்டு வெளியான “நான்” படத்தின் மூலம் ஹீரோவாகவும் அடுத்த பயணத்தை துவக்கினர். எல்லாரும் உனக்கு எதுக்கு இந்த வேலை என கேட்க அதை தமது படங்களின் வெற்றி மூலம் பதிலடி கொடுத்தார்.

ஆம், இவரின் கதை தேர்வுகளை பார்த்து வியந்தது திரையுலகம். தொடர்ந்து, சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, பிச்சைக்காரன் 2 என பல படங்களில் விஜய் ஆண்டனி நடித்து தற்போது பல முக்கிய ஹீரோக்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார். ஆம், விஜய் ஆன்டனி நடிப்பில் இன்னும் 5 படங்களுக்கு மேல் வர உள்ளது. மற்ற பெரிய நடிகர்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார் இவர். 

இந்த நிலையில் அடுத்து ‘ரோமியோ’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 24-வது படம். இந்த படம் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது. இதில் நாயகியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கிறார்கள். விநாயக் வைத்தியநாதன் டைரக்டு செய்கிறார்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகிறது. இந்த படத்தை குட் டெவில் என்ற பட நிறுவனம் மூலம் விஜய் ஆண்டனியே தயாரித்து, எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Share this post with your friends