Mnadu News

விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் குறித்து படத்தில் நடித்த பிரபலங்கள் கூறிய சுவாரசியமான  தகவல்கள் ;

இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்த படத்தில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின், பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகை சமந்தா கூறுகையில் “நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் இருவருமே 80 டேக்கிற்கு மேலாக எடுத்துக்கொண்டார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது நான் குறைவான டேக்குகள் வாங்கியுள்ளேன். ஒவ்வொரு காட்சியும் மிகவும் கடினமாக இருந்தது” என்றுகூறியுள்ளார்.

 

இவரை தொடர்ந்து இயக்குநர் மிஸ்கின் கூறியதாவது “ஒவ்வொரு காட்சியையும் 16  முறை என்னிடம் சொல்லிக்கொன்டே இருந்தார். ஏனேனில் படத்தின் கதை அப்படி. கதைக்கேற்றவாறு காட்சி அமையவில்லையேன்றால், திரும்ப திரும்ப நடிக்க வேண்டிருக்கும்” என்று மிஸ்கின் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிஸ்கின் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சமந்தா மற்றும் மிஷ்கினை தொடர்ந்து ‘சூப்பர் டீலக்ஸ்’ பட இயக்குனர் தியாகராஜா குமாரராஜா கூறியதாவது “படத்தில் பல காட்சிகளுக்கு 100 டேக்கிற்கும் மேலாக எடுக்க வேண்டியிருந்தது, கடந்த  2   வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த இந்த படம் வருகிற  மார்ச் 29ம் தேதி திரைக்கு வரவுள்ளது” என்று அவர் கூறினார் .

Share this post with your friends