குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாக உள்ள படம் தான் “மகாராஜா”. முக்கிய ரோல்களில் அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜன், முனிஸ்காந்த், அருள் தாஸ் மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு “காந்தாரா”, விக்ராந்த் ரோனா படங்களின் மூலம் தமது இசையால் கவனம் ஈர்த்த மற்றும் ரீச்சான அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
விஜய் சேதுபதியின் 50 படமான இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. பல நல்ல தரமான வெற்றி படங்களை தயாரித்து உள்ள பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் தி ரூட் கைகோர்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இப்படத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். விஜய் சேதுபதியும், அனுராக் காஷ்யப்பும் ஏற்கனவே இமைக்கா நொடிகள் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. “மகாராஜா” படத்தில் விஜய் சேதுபதி டூயல் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.