நடிகர் விஜய்க்கு தொடர் தோல்விகளை தந்த வருடங்கள் என்றால் அது 2008 முதல் 2010 வரை எனலாம். அடுத்தடுத்து தோல்விகளால் துவண்டு இருந்த விஜய்க்கு நம்பிக்கை தந்த படங்கள் காவலன் மற்றும் வேலாயுதம். இதன் பிறகே கதை மற்றும் இயக்குனர்கள் தேர்வை கவனமுடன் கையாண்டார் விஜய்.
2012 ஆம் ஆண்டு அவர் திரைப்பட வாழ்வில் முக்கியமான வருடம் ஏ ஆர் முருகதாஸ் – விஜய் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் இப்படம் வெளியாகி மூவரின் வாழ்விலும் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.
₹120 கோடிகளை இப்படம் வசூல் செய்து விஜய்யை பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக மாற்றியது இப்படமே.
திரைக்கதை அமைப்பு, பாடல்கள், வசனங்கள் என அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது இப்படம். இதன் பிறகு விஜய் வாழ்வில் ஏறுமுகம் என்றே சொல்ல வேண்டும். இந்த வருடத்தொடு துப்பாக்கி வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.