மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து நான்கு படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், தற்போது இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
மாஸ்டர் படத்தில் தான் பணியாற்றிய திறனை பார்த்து அசந்து போன நடிகர் விஜய் மீண்டும் அவரோடு கூட்டணி அமைக்க ஆசைப்பட்டு தளபதி 67 மூலம் இணைந்துள்ளார். இந்த படம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கிடையில் ராக்கிங் ஸ்டார் யாஷ் இடம் ஒரு பெங்களூரு டான் கதை ஒன்றை சொல்லி அதை ஓகே செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ் என தகவல் கசிந்துள்ளது.
இது மாபெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தளபதி 67 படம் அடுத்த வருட ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. அது முடிந்த உடன் லோகேஷ் யாஷ் இணைவது உறுதி ஆகியுள்ளது. இது ஒரு பான் இந்தியா படமாக அமைய உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.