விஜய் 67:
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் விஜய், திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஸ்கின் பிரியா ஆனந்த், ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடிப்பில் உருவாகி வருகிறது விஜய் 67.

அடுத்தடுத்த வந்த அப்டேட்ஸ்:
கடந்த சில நாட்களாக விஜய் 67 பட தயாரிப்பு நிறுவனம் பல்வேறு அப்டேட்ஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்து வருகின்றனர். அப்படி, இரண்டு நாட்களுக்கு முன் படத்தின் கலைஞர்கள் அறிவிப்பு, பூஜை வீடியோ என வெளியிட்டு வந்த அவர்கள். தற்போது, மேலும் ஒரு அறிவிப்பை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.

நெட்ஃபிளிக்ஸ் உடன் ஒப்பந்தம்:
விஜய் 67 படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓ டி டி தளம் ஒரு பெரும் தொகைக்கு வாங்கி உள்ளது. இதை அந்த நிறுவனம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாட்டத்தில் எடுபட்டு உள்ளனர்.
