Mnadu News

விஜய் 68 எவ்வளவு கோடிகளுக்கு விற்பனை ஆகியுள்ளது தெரியுமா?

மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் காம்போ மீண்டும் இணைந்துள்ள படம் “லியோ”. சுமார் 300 கோடி பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வருகிறது லியோ. இதில் விஜய்யின் சம்பளமாக 125 கோடிகள் கொடுத்துள்ளது தயாரிப்பு குழு. ரஜினிக்கு அடுத்தப்படியாக விஜய் தான் வசூல் மன்னனாக இருந்து வருகிறார்.

லியோ படத்தில் திரிஷா, அர்ஜூன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், ஆண்டனி பாபு, ஜார்ஜ் மரியான், அர்ஜூன் தாஸ் என பெரும் நட்சத்திர குவியலாக லியோ உருவாகி வருகிறது. மேலும், யாரும் எதிர்பாராத பல சர்ப்ரைஸ்கள் அடங்கி உள்ளதாக லோகேஷ் கனகராஜ் கூறி இருந்தார். கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக விஜய் படத்துக்கு இசை அமைத்துள்ளார் உள்ளார் ராக் ஸ்டார் அனிருத். ஆம், இப்படத்தின் இசை உரிமை 15 கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது என்கிற தகவலும் வெளியாகி இருந்தது.

தளபதி விஜய் லியோ படத்தின் சூட்டிங் முடித்தவிட்டார். தற்போது ஓய்வில் உள்ள அவர், அடுத்த படமான வெங்கட் பிரபுவின் படத்துக்காக தன்னை தயார் செய்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். சுமார் 18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்துக்கு யுவன் ஒப்பந்தமாவது குறிப்பிடதக்கது. ஏ ஜி எஸ் நிறுவனம் மீண்டும் இரண்டாவது முறையாக விஜய் உடன் இணைந்துள்ளது.

விஜய் 68 படத்தின் நடிகர் நடிகைகள் என தேர்வு பணிகள் நடந்து வரும் நிலையில், ஜெய் 20 வருடங்களுக்கு பிறகு விஜய்யின் தம்பியாக நடிக்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் படத்தின் இசை உரிமையை ஒரு பிரபல நிறுவனம் 25 கோடிகளுக்கு வாங்கி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும், ஒரு முன்னணி ஓ டி டி நிறுவனமும் விஜய் 68 படத்தை வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Share this post with your friends