Mnadu News

விஜய் 68 குறித்து வெளியான மாஸ் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது “லியோ” படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய். பெரும் எதிர்பார்ப்புக்கு  மத்தியில் உருவாகி வரும் இப்படம் வரும் அக்டோபர் 19 அன்று உலக அளவில் வெளியாக உள்ளது.

சுமார் 300 பட்ஜெட் இல் பிரம்மாண்ட நடிகர்கள் பட்டாளமே இதில் இணைந்து பணியாற்றி உள்ளனர். அதே போல பான் இந்தியா படம் என்பதால் அனைத்து மொழி நடிகர்களையும் ஒன்றிணைத்து சம்பவம் செய்துள்ளார் லோகேஷ் என படத்தில் பணியாற்றிய பலரும் பல நேர்காணல்களில் கூறி வருகின்றனர். LCU ஃபார்முலா வில் படம் இருக்கும் அல்லது முற்றிலும் வேறு கதையா என பல வியூகங்கள் பலரும் வகுத்து வருகின்றனர். வழக்கமாக விஜய் தான் நடித்து வரும் படம் முடிவதற்குள் அடுத்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்து விடுவார், அப்படி அவர் முடிவை எடுத்து விட்டார் என்றால் அதில் எந்த மாற்றமும் இருக்காது.

ஆம், விஜய் 68 படத்தை யார் இயக்க போவது என்கிற கேள்வி பலரும் கேட்டு வந்த நிலையில், அதை உறுதி செய்தது ஏ ஜி எஸ் தயாரிப்பு தரப்பு. ஆம், அது இயக்குனர் வெங்கட் பிரபு தான் இயக்க போவது. இதற்கு முன்னர் அட்லீ, தெலுங்கு இயக்குனர் போன்ற பல பெயர்கள் அடிபட்ட நிலையில், யாருமே எதிர்பாராத கூட்டணியை விஜய் இந்த முறை கட்டமைத்துள்ளார். அதுவும் இதுவரை விஜய் ஏற்காத ரோல் போல வெங்கட் பிரபு வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் விஜய் டூயல் ரோல் செய்ய போகிறார் என்பது உறுதியாகி உள்ளது. இதுவரை அழகிய தமிழ் மகன்,கத்தி, தெறி, மெர்சல், பிகில் என இதுவரை விஜய் செய்த டூயல் ரோல் சம்பவங்கள் ஏராளம். மேலும், இந்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேறப்பை பெற்றது. அது போலவே மீண்டும் வெங்கட் பிரபுவும் கதாபாதிரத்தை கொண்டு வர போவதாக தெரிய வந்துள்ளது. விஜய் 68 பரீ ப்ரொடக்ஷன் பணிகள் துரித கதியில் நடந்து வரும் நிலையில், சூட்டிங் நவம்பர் முதல் வாரத்தில் துவங்கும் என கணிக்கப்படுகிறது.

Share this post with your friends