Mnadu News

விடாமுயற்சி ஷூட்டிங் தேதி எப்போ தெரியுமா? எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்ஸ் உள்ளே!

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இந்த வருட பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படம் பிரம்மாண்ட பிளாக் பஸ்டர் வெற்றியை பதிவு செய்த நிலையில், அஜித் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால், துணிவு படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் தான் அஜித்தை இயக்க போகிறாரா என ரசிகர்கள் பலரும் கிண்டலாக கேள்வி எழுப்பி வந்த நிலையில், சொல்லி வைத்தார் போல விக்னேஷ் சிவன் கதை லைக்கா மற்றும் அஜித் இருவருக்குமே பிடிக்காமல் போக தீடீர் டுவிஸ்ட் அரங்கேறியது.

ஆம், அஜித் 62 படத்தை யார் இயக்க போகிறார் என்கிற கேள்விக்கு பதிலை ரசிகர்களே தர துவங்கினர். அதாவது விஷ்ணு வர்தன், வெங்கட் பிரபு என அடுக்கடுக்கான பெயர்கள் லிஸ்டில் இருந்தன. ஆனால் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் மகிழ் திருமேனி லிஸ்டில் இணைந்தார். ஆம், மகிழ் திருமேனி சொன்ன கதை அஜித், லைக்கா இருவருக்குமே பிடித்து போக, உடனடியாக அட்வான்ஸ் கொடுத்து ஓகே செய்து விட, தல ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

மகிழ் திருமேனி என்றால் ஸ்கிரீன் பிளே நிச்சயம் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து. ஆனால், படம் ஒப்பந்தம் ஆன நேரத்தில் அஜித் டூர் சென்று இருந்ததால் அதை முடித்து விட்டு ஷூட்டிங் துவங்கலாம் என கூறி விட்டார். தற்போது அது குறித்த ஒரு எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் கிடைத்து உள்ளது.

ஆம், விடாமுயற்சி பட சூட்டிங் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ளது. முதல் ஷெட்யூல் ஹைதராபாத்தில் நடப்பதற்கான செட் வேலைகள் அனைத்தும் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதை அடுத்து மலேசியாவில் படப்பிடிப்பை நடத்துவதற்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதை கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் உற்சாக கடலில் நீந்த துவங்கி விட்டனர். மேலும், விஜய் 68 vs அஜித் 62 மோத வாய்ப்புகள் அதிகம் என்றே கணிக்கப்படுகிறது.

Share this post with your friends