Mnadu News

விட்ட இடத்தை பிடிக்கப் பார்க்கும் ஏ ஆர் முருகதாஸ்! மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா?

ரமணா, தீனா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் என பிளாக் பஸ்டர் வெற்றி படங்களின் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.
இவர் எடுக்கும் படங்கள் என்றாலே கதையும் இருக்கும், கமர்ஷியல் படமாகவும் இருக்கும் இது தான் இவரின் ஃபார்முலா. என்ன தான் கதை திருட்டில் இவர் மட்டிக்கொண்டாலும் இவர் இயக்கினால் படம் ஹிட் என்பது எழுதப்பட்ட விதி.

நடிகர் சூர்யாவின் கேரியர் ப்ரேக் படம் என்றால் அது கஜினி எனலாம். பாடல், வசனம், கதைக்களம், இயக்கம் என படம் வசூல் சாதனை படைத்து முருகதாஸை ஹிந்தி வரை அழைத்து சென்று அங்கும் நல்ல பெயர் பெற்று தந்தது.
அதே போல விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து விஜய்யின் பாதையை மாற்றியவர்.

ஆனால், 2020 ஆம் ஆண்டு இவரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த “தர்பார்” திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அதனால், கட்டாய வெற்றியை பதிவு செய்யும் வேகத்தில் கதைகளை பல முன்னணி ஹீரோக்கள் இடம் கூறி வருகிறார். அப்படி, ஒரு கதை தான் கஜினி 2 இதற்கு சூரியாவும் ஓகே சொல்லிவிட்டார் எனவும் தகவல் கசிந்துள்ளது.

Share this post with your friends