இந்தியாவில் தமிழர்களை போலவே மற்றொரு மாநிலமும் ஏப்ரல் 14 அன்று புதுவருட பிறப்பை கொண்டாடும் அந்த மாநிலம் அசாம் .இந்த வருட பிறப்பை சற்று வித்தியாசமாக அசாமை சேர்ந்த நாசா விண்வெளிவீரர் அவரது பாரம்பரிய பிஹு நடனமாடி வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் .
உலக தரவரிசையில் நாசா விண்வெளி சம்மந்தப்பட்ட ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது . விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நாசா வீரர் அசாமின் பாரம்பரிய ‘பிஹு’ நடனம் ஆடியது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
அசாம் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர் விண்வெளியில் ஆடிய பாரம்பரிய நடனம் குறித்த வீடியோ பதிவு மக்கள் மத்தியில் மிகவும் அதிகமாக பரவி வருகிறது.