சமூக வலைதளங்களில் யூ – டியூபர் என்பது தற்போது வருமானம் ஈட்டும் முக்கிய பணியாக மாறி வருகிறது. அந்த வகையில் தங்கள் வீடியோக்களை மக்கள் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று யூ டியூபர்கள் சிலர் எல்லை மீறும் செயல்களில் ஈடுபடுவது வழக்கமாகி வருகிறது.இதற்கு உதாரணமாக, அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் விமானியான ட்ரெவர் ஜேக்கப். 2021 ஆம் ஆண்டு தான் நடத்தி வரும் யூ டியூப் தளத்தில் ‘நான் எனது விமானத்தை விபத்துக்குள்ளாக்கினேன்’ என்ற தலைப்பில் வீடியோவை பதிவு செய்திருந்தார். இதனை 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்திருக்கிறார்கள்.இதையடுத்து ஜேக்கப் அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்த் அவருக்கும் 20 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More