Mnadu News

வியாபாரிகளை பழிவாங்குகிறதா மாநகராட்சி நிர்வாகம்..?

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் சாலையில் ராஜாஜி காய்கறி சந்தை ஆனது செயல்பட்டு வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வரும் நிலையில் காய்கறிகளை வாங்கிட அதிகளவிலான மக்கள் மட்டுமின்றி வியாபாரிகளுமே வந்திருந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் இக்கடையிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகள்„காய்கறி கழிவுகள் மார்கெட்டின் பின்புறமாக கொட்டப்பட்டு அக்குப்பைகள் அனுதினமும் மாநகராட்சி லாரிகளின் மூலம் கொண்டுசெல்லப்பட்டு தூய்மை பணியும் மேற்கொள்ளப்படும்.

ஆனால் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியிலிருந்து குப்பைகள் சேகரித்திடாமல் குப்பைகளானது மலைபோல் குவிந்து காணப்பட்டு வருகிறது. மேலும் குப்பைகள் சாலைகளிலும் சிதறி காணப்படுவதுடன் அங்காங்கே தண்ணீரானது தேங்கி சேரும் சகதியுமாய் கால் வைக்கவே ஒப்பாத இடமாக மாறி காணப்பட்டு வருவதோடு துர்நாற்றமும் வீசு வருகிறது.

மேலும், இந்த ராஜாஜி காய்கறி சந்தைக்கான புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிட பணிகளுக்காக தற்காலிக காய்கறி சந்தைக்கு செல்ல மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அறிவுறித்தி வரும் நிலையில் கடையின் உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கவே மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளிடாமல் இத்தகைய நெருக்கடி கொடுக்கிறதோ எனும் சந்தேகம் தங்களுக்கு எழும்புவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Share this post with your friends