கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெவிலி ஹில்ஸ் நகரில் 96வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சிஇன்று நடைபெற்றது. இதில், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய 7 பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த ஓப்பன்ஹெய்மர் திரைப்பட குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.