கல்ட் இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஷ்வர்யா ராய் ,பிரகாஷ் ராஜ், விக்ரம், ரஹ்மான், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராமன், ரியாஸ் கான், லால், நாசர், நிழல்கள் ரவி, கிஷோர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி உலக ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வரும் படம் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று.
இந்த படம் வெளியாகி 15 நாட்களை கடந்து விட்ட நிலையிலும் வசூலை அள்ளி வருகிறது. தற்போது வரை இப்படம் 460 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதை தவிர ஏற்கனவே 125 கோடிகளுக்கு அமேசன் பிரைம் ஓடிடி தளம் வாங்கி விட்டது. பல வசூல் சாதனைகளை நிகழ்த்தி வரும் இப்படம் அடுத்த மாதம்
அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.
அதே போல் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு அடுத்த வருட ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.