தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் 5 ஆயிரத்து 400 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளை சுமார் 11 லட்சம் பேர் எழுதினர்.
இந்த நிலையில், முதல்நிலை எழுதுத்துத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும். எனவே, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு உரிய இணையதளத்தை நாடவும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவித்துள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More