மும்பையில் மின்சார ரயில்கள் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில் , சென்னை புறநகர் ரயில்களிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஏசி பெட்டிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. முதற்கட்டமாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே குளிர்சாதன வசதியுடன் மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து மத்திய அரசிடம் தெற்கு ரயில்வே அனுமதி கேட்டு நடவடிக்கை எடுத்த நிலையில், சென்னையில் குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய மின்சார ரயில்களை இயக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஏசி பெட்டி ரயில்களை இயக்கினால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதோடு, ஏசி பெட்டிகளை அறிமுகப்படுத்த ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.இதனால் விரைவில் சென்னையில் குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது. சென்னையில் வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More