பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் கார்த்தி நடிப்பில் வெளியாக தயாராக உள்ளன. பல வருடங்களுக்கு பிறகு கார்த்தி நடிப்பில் இரண்டு படங்கள் ஒரே வருடத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பலரிடம் கதை கேட்டு வந்த கார்த்தி தற்போது ராஜு முருகன் படத்தில் நடிக்க உள்ளது உறுதி ஆகியுள்ளது. அரசியல் படமாக உருவாக போகும் இப்படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் சில முடிந்துள்ள நிலையில், படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வரும் அக்டோபர் 5 அன்று துவங்க பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தை அடுத்த வருட ஏப்ரல் மாத வெளியீடாக கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.