Mnadu News

விரைவில் பார்ட் 2! நெல்சன் கொடுத்துள்ள டுவிஸ்ட்? குழப்பத்தில் ரசிகர்கள்!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த ரவி, ஜாக்கி ஷராப், தமன்னா, சுனில், ரெடின், சுனில் ரெட்டி போன்ற பலர் நடிப்பில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக் வருகிறது “ஜெயிலர்”.  இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்த நிலையில் அடுத்து ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக நெல்சன் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் யோசனை உள்ளது. அதுபோல் நான் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்கவும் திட்டம் உள்ளது” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “ரஜினிகாந்த், விஜய் ஆகிய இருவரும் மாஸ் நடிகர்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படமொன்றை இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. அது பெரிய பணி. நேரம் வரும்போது நிச்சயம் செய்வேன்” என்றார்.

இந்த இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை கேள்விப்பட்டுள்ள ரசிகர்கள் எந்த படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வர உள்ளது என்கிற ஆவலில் உள்ளனர். இந்த நிலையில் நெல்சன் அடுத்து தனுஷ் உடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Share this post with your friends