Mnadu News

விரைவில் மயிலாடுதுறையில் கபாடி போட்டி பயிற்சி நிறுவனம்..!

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் தமிழக பாஜக சார்பில் மோடி லீக் கபாடி போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று இறுதிபோட்டி நடைபெற்றது. இதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.

இறுதிப்போட்டியில் முதல் பரிசு சேலம் கிழக்கு அணியும், இரண்டாம் பரிசை சேலம் மேற்கு அணியும், மூன்றாம் பரிசை திருநெல்வேலி அணியும் தட்டி சென்றது.

இதனையடுத்து விழாவில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை மயிலாடுதுறையில் கபாடி போட்டிக்கான உயர்தர பயிற்சி நிறுவனம் நிச்சயம் கொண்டுவருவோம் என்றும் ஒரு விளையாட்டு போட்டி எப்படி நடத்த வேண்டுமோ அப்பாடி இந்த மோடி கபாடி லீக் போட்டியை நடத்தியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

Share this post with your friends