கேடி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தமன்னா. அந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு வெறும் 16 வயது தான். இதையடுத்து கல்லூரி படத்தில் நடித்த அவர், 18 வயதை தாண்டியதும் கிளாமர் பக்கம் தாவினார். இதனால் குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் தமன்னா. தமிழைப் போல் தெலுங்கு மொழியில் தமன்னாவுக்கு அதிக மவுசு இருந்தது.
சமீப காலமாக தமன்னாவுக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் பாலிவுட்டில் ஐக்கியம் ஆகிவிட்டார். அங்கு பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக வெப் தொடர்களில் கவர்ச்சியை வாரி இறைத்து இருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆகிய வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார். முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என இத்தனை ஆண்டுகளாக கட்டுப்பாடுகளோடு இருந்த தமன்னா தற்போது அதையெல்லாம் தகர்த்து லிப்லாக் காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகை தமன்னா நடிப்பில் தற்போது தமிழில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார் தமன்னா. சமீபத்தில் அவர் நடனமாடிய காவாலா என்கிற பாடலை படக்குழு வெளியிட்டு இருந்தது. அந்த பாடலில் தமன்னா ஆடிய நடனம் தான் தற்போது பலரும் ரீக்கிரியேட் செய்து வருகின்றனர். அதுகுறித்த ரீல்ஸ் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமை ஆக்கிரமித்து உள்ளன.
இந்நிலையில், நடிகை தமன்னாவிடம் உலகின் 5-வது பெரிய வைரம் இருக்கும் தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த வைரம் அவருக்கு பரிசாக வந்ததாம். ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த காஸ்ட்லி வைரத்தை தமன்னாவுக்கு பரிசாக கொடுத்தது தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பம் தானாம். தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சைரா நரசிம்மா ரெட்டி. இப்படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரணின் மனைவி உபாசனா தான் தயாரித்திருந்தார். அவர் தான் தமன்னாவுக்கு அந்த சமயத்தில் இந்த விலையுயர்ந்த வைரத்தை பரிசாக கொடுத்து இருக்கிறார்.