கர்நாடகாவில் பெலகாவியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா,காங்கிரஸ் சாவர்க்கரை அவமதித்தது.ஆனால் பாஜக., மஹாராஷ்டிரா மாநிலத்தை வளர்ச்சிக்கு வழிவகை செய்து, அப்பகுதி மக்களுக்கு மரியாதை அளித்து வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதன் மூலம் ராமர் பக்தர்களின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தள் என்ற அமைப்பை தடை செய்வேன் எனக் கூறி அவமதித்துள்ளது. ராகுல் உத்தரவாதங்களில் யாருக்கும் நம்பிக்கை இல்லை. திரிபுரா, அசாம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. பி.எப்.ஐ-யை தடை செய்தது, பொதுமக்களுக்கு ரேஷன் கொடுத்தது, குடிநீர் வசதி, சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது பாஜக தான். இரட்டை எஞ்சின் அரசு மக்களின் நலனுக்காக பாடுபட்டுள்ளது. என்று பேசி உள்ளார்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More