மதுரை மாவட்டம் அவனியாபுரம்-முத்துப்பட்டி செல்லும் வழியில் உள்ள கண்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் வாலிபர் பிணம் மிதப்பாதக அவனியாபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவனியாபுரம் போலீஸார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் பிணத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் இறந்த வாலிபர் அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியை சேர்ந்த முனியாண்டி பெருமாள்(22) .இவருக்கு குருதேவி என்ற மனைவியும் 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர் தனியார் பெயிண்ட் கடையில் வேலை செய்து வருகிறார். இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து. வருகின்றனர்.