Mnadu News

“விவேகத்துடன் செயல்படுங்கள்”: ராகுலுக்கு பாஜக அறிவுரை.

டெல்லியில்,செய்தியாளர்களிடம் பேசியுள்ள பாஜக., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, ராகுலின் வருகையைப் புறக்கணிக்கக் மணிப்பூர் மாணவர் சங்கத்தினர்; வலியுறுத்தினர்.அதோடு, ராகுல், மணிப்பூருக்கு வந்து தீப்பொறிகளைத் தூண்ட வேண்டாம் என்று பல சமூக அமைப்புகளும் கூறியிருந்தனர். ,மணிப்பூரில் நிலைமை மோசமாக இருக்கும் இந்த நேரத்தில், பிடிவாதத்தை விட விவேகத்துடன் செயல்படுவது முக்கியம். சாலை மார்க்கமாக செல்ல ராகுலுக்கு விருப்பம் இல்லை. ராகுலின் நடத்தை மிகவும் பொறுப்பற்றது. ,ராகுல் பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். ராகுல் வருவதை யாரும் தடுக்கவில்லை, ஆனால் ராகுல் வருகை மக்கள் மத்தியில் நிறைய போராட்டங்கள் உருவாக்கி உள்ளன என அம்மாநில நிர்வாகம் கூறியுள்ளது என்று கூறி உள்ளார்.

Share this post with your friends