நடிகர் விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர்.
தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. திரைக்கதையும் தயாராகி வந்தது. தற்போது ‘இரும்புத்திரை’ இரண்டாம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன . இந்த படத்தை இயக்குனர் எழிலிடம் பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்குகிறார்.
இதில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. இந்த நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.