விஷ்ணு விஷால் என்கிற நடிகர் எந்த கதையை தேர்வு செய்து நடித்தாலும் அதில் மிக பெரிய அற்பணிப்பு இருக்கும்.
வெண்ணிலா கபடக்குழு, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், ஜீவா, ஃ ஐ ஆர்
தமது சினிமா கேரியர் ஐ செதுக்கி வருகிறார் படத்துக்கு படம்.
கமர்ஷியல் படங்களையும், கதை அம்சம் கொண்ட கிளாசிக் படங்களையும் என இரண்டையும் கலந்து கொடுப்பதில் கை தேர்ந்தவர் இவர். எவ்வளவோ படங்கள் தோல்விகளை சந்தித்தாலும் அதை புறம் தள்ளி, அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தி நடிப்பதில் ஆர்வம் காட்டுபவர்.
தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் “கட்டா குஸ்தி”. இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே பெரிதும் கவனம் ஈர்த்தது. செல்லா அய்யாவு இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். விவேக் அனைத்து பாடல்களையும் எழுதி உள்ளார். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் அன்பறிவ் கூட்டணியில் உருவாக உள்ளது. இவர்கள் கே ஜி ஃப் 2, விக்ரம் ஆகிய படங்களுக்கு ஸ்டண்ட் கோரியோ அமைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டரை இன்று நடிகர் தனுஷ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.