நெல்லை பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவற்றின் 20 வயது மகன் பாலமூர்த்தி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பாலமூர்த்தி தனது வீட்டின் மாடி சுவரில் துணி காய வைத்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயரழுத்த மின் வயர் சுவரில் தொட்டபடி மிக தாழ்வாக சென்றதாலும் சுவர் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் பாலமூர்த்தி இறந்துள்ளதாக தெரிகிறது. மேலும் மின்வாரியம் மற்றும் மாநகராட்சியின் அலட்சியத்தால் தான் இச்சம்பவம் நடந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More