Mnadu News

வீட்டிலிருந்து வேலை தார்மீக ரீதியில் தவறானது: எலான் மஸ்க் காட்டம்.

கோவிட் பரவல் காரணமாக வீட்டில் இருந்து வேலை நடைமுறை வெகுவாக பிரபலமடைந்தது. தற்போது பல நிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்தில் வந்து பணிபுரியுமாறு ஊழியர்களை கேட்டுகொண்டுள்ளன.இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள, உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா சி.இ.ஓவுமான எலான் மஸ்க், வீட்டிலிருந்து மடிக்கணினியை வைத்து கொண்டு பணியாற்றுவது உற்பத்தித்திறனைக் குறைக்கிறது. அதோடு, அதனை விருப்ப தேர்வு செய்ய வாய்ப்பில்லாத தொழிலாளர்கள், பிற ஊழியர்களுக்கு தவறான சமிக்ஞையை அனுப்புகிறது.அதே நேரம். அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும். நீங்கள் செல்ல வேண்டியதில்லை என கருதுவது குழப்பத்தை உருவாக்குகிறது. லேப்டாப் வகுப்பு என்பது பைத்தியகார உலகில் வாழ்வது போன்றது என்று கூறி உள்ளார்.

Share this post with your friends