வந்தவாசியில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவண்ணாமலை வந்தவாசி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர்கள் ரேணுகா, ஏழுமலை, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் சரவணன் கண்டன உரை ஆற்றினார். எஸ்.மோட்டூர், அதியங்கொப்பம், கீழ்ப்புத்தூர், கீழ்குவளைவேடு, ரெட்டிகுப்பம், தென்சேர்ந்தமங்கலம் ஆகிய கிராமங்களில் அனைத்து பழங்குடி மக்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டனர். இதில் மாநில செயலாளர் அய்யனார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வன், சேகரன், வெங்கடேசன், வட்டார செயலாளர் அப்துல் காதர், விவசாய சங்கத் தலைவர் ஹரிதாசு சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் ஆனந்தன் நன்றி கூறினார்.