கடந்த 2005 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரின் திருமணத்தை ரத்து செய்து குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக அவரது மனைவி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ,அந்த மேல்முறையீட்டு மனுவில், என் கணவர் மதுப்பிரியர் மற்றும் பெண் வெறியர் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால், பொய்யான குற்றங்களைக் கூறி கணவருக்கு மன வேதனை அளித்தாக எதிர் தரப்பில் வாதிடப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், கணவரின் நடத்தை மீது பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார். இது சமூகத்தில் கணவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது கணவரை கொடுமைப்படுத்துவதற்கு சமம் என்று கூறி குடும்ப நல உத்தரவை உறுதி செய்வதாக கூறினார். அதோடு, வீட்டு வேலை செய்ய விரும்பாத பெண்கள் திருமணத்திற்கு முன்பே மணமகனிடம் அதை தெரிவிக்க வேண்டும் என்றும் அப்போது தான் அவரால் திருமணம் குறித்து தெளிவான முடிவு எடுக்க முடியும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனைவியின்; மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் போதே இராணுவத்தில் ‘மேஜர்’ ஆக இருந்து ஓய்வு பெற்ற அவர் உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More