Mnadu News

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: மரக்காணத்தில் உப்பு உற்பத்தி உயர்வு.

மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 3,500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்கிருந்து ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.இந்த உப்பு சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இருப்பதால் மனிதர்களின் பயன்பாட்டிற்காக கூடுதலாக கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு அனைத்தும் உணவுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இத்தொழிலை நம்பி மரக்காணம் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் உள்ளனர். இப்பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்கும் உப்பு உற்பத்தி பணி தொடர்ந்து அக்டோபர், நவம்பர் மாதம் வரை நடைபெறும்.ஆனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக புகுந்தது. உப்பளங்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தியின் அளவும் அதிகரித்துள்ளது.

Share this post with your friends