நடப்பு ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. ஆடுகலத்தின் தன்மையைப் பார்க்காமல், ஆரம்பகட்ட மேகமூட்ட வானிலையைப் பார்த்து பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியாவை பேட் செய்ய முதலில் அழைத்து இப்போது வெற்றி வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் இருப்பதோடு, இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று விட்டால் ஆஷஸ் தொடரே கையை விட்டுப் போகும் பேராபத்தில் அணியை தள்ளி இருக்கிறார். இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் இங்கிலாந்து அணியை கடுமையாக விமர்சித்துள்ளார்: “இங்கிலாந்தைப் பற்றி கவலை அடைகிறேன். ரொம்பவும் மெத்தனமாக ஆடுகிறார்கள், மெத்தனப் போக்கைக் கடைபிடிக்கிறார்கள். எட்ஜ்பாஸ்டனில் அவர்கள் சப்தத்தை இழந்தனர். ஆனால், லார்ட்ஸில் உண்மையில் மீட்டெழுச்சியுடன் ஆட வேண்டியவர்கள் மெத்தனமாக ஆடுகின்றனர். இதனால் இந்த டெஸ்ட்டை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தற்சமயம், ‘வெறும் வாய்ச்சொல் வீரர்கள்’என்பதை இங்கிலாந்து அணியினர் நிரூபித்துள்ளனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More