Mnadu News

வெற்றிக் கூட்டணியில் இணையும் அதிதி ஷங்கர்! ஹீரோ இவரா ?

பிரம்மாண்டம் என்கிற சொல்லை கேட்டுக்கும் போது நம் அனைவரது நினைவுக்கு வருவது இயக்குனர் ஷங்கர் மட்டுமே. ஆம், அவர் இயக்கிய படங்கள் குறைவே என்றாலும் அவை ஒவ்வொன்றும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து இன்றுவரை நிலைத்து நிற்பவை.

தற்போது, GAME CHANGER, இந்தியன் 2 என ஒரே நேரத்தில் இரண்டு படங்களையும் பரபரப்பாக இயக்கி வருகிறார். அடுத்த வருடம் இந்த இரண்டு படங்களுமே திரைக்கு வர உள்ளன. இந்த படங்களை முடித்துவிட்டு ஒரு பொலிடிகல் ஸ்கிரிப்ட் நடிகர் விஜய்யை வைத்து எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி ஒரு பிரம்மாண்ட இயக்குனரின் வீட்டில் இருந்து இன்னொரு பிரம்மாண்ட பாடகி, நடிகை என பன்முகங்கள் கொண்டவர் திரைதுறையில் அறிமுகமாகி வெற்றி நடை போட்டு வருகிறார். ஆம், அவர் தான் அதிதி ஷங்கர். முத்தையா இயக்கத்தில், கார்த்தி ஹீரோவாக “விருமன்” படத்தில் நடித்து, பாடல் பாடி பிரபலமடைந்தார் அதிதி, முதல் படமே இவருக்கு கலவையான விமர்சனங்களை அள்ளி வழங்கியது.

அந்த படம் வெளியாகும் முன்னரே, மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார் அதிதி, மாவீரன் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டது. இந்த படமும் இவருக்கு கைகொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

தற்போது, இவர் இன்னொரு நட்சத்திர நடிகருடன் இணைய உள்ளார். ஆம், சுதா கொங்கரா படத்தில் நடிகர் சூரியாவுடன் அதிதி இணைந்து பணியாற்ற உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. மேலும், சூரரை போற்று படதுக்கு பின்னர் இந்த படத்துக்கும் ஜி வி பிரகாஷ் குமார் தான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends