தென் மேற்கு பருவகாற்று துவங்கி சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு தனி ரசிகர் வட்டம் உருவானது. கிராம புறங்களில் இருக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலை படமாக கொண்டு வருவதில் இவருக்கு நிகர் இவரே. ஆழமான உணர்வுகளை அழகாய் நேர்த்தியாய் கலை செய்வதில் வல்லவர்.
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட “இடம் பொருள் ஏவல்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும் படம் வெளியாவதற்கு பெரும் தாமதம் ஆனது. விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஷ்வர்யா ராஜேஷ், நந்திதா, அழகம் பெருமாள், இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில், வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதி உள்ளார்.
தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரெய்லர் லிங்க் : https://youtu.be/_k4h9hMeHto