Mnadu News

வெளியானது இயக்குநர் சற்குணம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

களவாணி, வாகை சூடவா, நையாண்டி, சண்டி வீரன், களவாணி 2 போன்ற படங்களின் மூலம் மண் சார்ந்த படங்களுக்கு பெயர் பெற்றவர் இயக்குநர் சற்குணம்.

சிறு பட்ஜெட், பெரிய பட்ஜெட் என இரண்டு வகையான படங்களையும் லைக்கா நிறுவனம் தொடர்ந்து தயாரித்து வருகிறது. அதில் இணைந்துள்ளது “பட்டத்து அரசன்”.

ராஜ்கிரண், அதர்வா முன்னணி ரோல்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். மூன்றாவது முறையாக ஜிப்ரான் சற்குணம் கூட்டணி இணைந்துள்ளது. விவேகா, மணி அமுதவன் பாடல்களை எழுதி உள்ளனர். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends