Mnadu News

வெளியானது “கேப்டன் மில்லர்”! டீசர்! ரிலீஸ் தேதி அறிவிப்பு ! HBD தனுஷ்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்”. வரலாற்று பின்னணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது.

சமீபத்தில் “கேப்டன் மில்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி பிலீம்ஸ் நிறுவனத்தின் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. அண்மையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஜூலை 28 சம்பவம் இருக்கு.. கில்லர் கில்லர் என்று பதிவிட்டிருந்தார். இந்த கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என பேசப்பட்டது.

அந்த வகையில் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தற்போது மற்றொரு அறிவிப்பை ஜூலை 27 அன்று வெளியிட்டது அதாவது “நாளை ஜூலை 28 நள்ளிரவு 12.01-க்கு “கேப்டன் மில்லர்” படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக அறிவித்தது”.

இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “கேப்டன் மில்லர்” படத்தின் டீசர் வெளியாகி வைரல் ஆகி உள்ளது. முற்றிலும் துப்பாக்கிகளின் சத்தம், ரத்தம், போர் போன்ற காட்சிகளில் தனுஷ் நடித்துள்ள மிரள வைக்கும் ஸ்டண்ட் காட்சிகள் பார்பவரின் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. ஆனால், இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட “கேப்டன் மில்லர்” படம் டிசம்பர் 15 அன்று வெளியாகும் என படக்குழு அதிகரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

Share this post with your friends