Mnadu News

வெளியானது சர்தார் படத்தின் ஏறுமயிலேறி பாடல்!

இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி டெக்னாலஜியின் மறுபக்கத்தை தோலுரித்து காண்பித்தவர் இயக்குநர் பி எஸ் மித்ரன்.

அடுத்ததாக ஹீரோ படத்தின் மூலம் நமது நாட்டு இளம் அறிவியல் விஞ்ஞானிகளை எப்படி வளர விடாமல் தடுக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்டி இருப்பார் மித்ரன்.

சமூகப் பொறுப்பு கொண்ட இயக்குனர்கள் குறைந்து வரும் காலகட்டத்தில் தனக்கென தனி பாணியில் பயணித்து வருகிறார் மித்ரன்.

மித்ரன் கார்த்தி கூட்டணியில் உருவாகி உள்ள படம் தான் “சர்தார்”. ஜி வி பிரகாஷ் குமார் இசையில் தற்போது இப்படத்தின்
“ஏறுமயிலேறி” யுகபாரதி வரிகளில் வெளியாகி உள்ளது. நாட்டுப்புறக் கூத்து பாணியில் இப்பாடல் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடல் லிங்க் : https://youtu.be/_qdwl3ErV0I

Share this post with your friends