Mnadu News

வெளியானது தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் யாரும் பார்த்திராத புகைப்படம்

வித்தியாசமண திரைப்படங்களை எடுத்த  புகழ் பெற்ற பல இயக்குனர்களில்  செல்வராகவனும் ஒருவர்.  இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் எடுத்த திரைப்படங்கள் குறைவாக இருந்தாலும் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம் அதற்கு உதாரணமாக இவர் எடுத்த 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் இவரின் கற்பனை திறனையும் சிறந்த இயக்குனரான அங்கீகாரத்தையும் மக்கள் முன்னிலையில் பெற்றுத் தந்தது.

ஆரம்பத்தில் எழுத்தாளராக பயணத்தை ஆரம்பித்த இவர் படிப்படியாக முன்னேறி தனுஷின் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் கதை ஆசிரியராக பயணித்தார். அதன் பின் 2003 ஆம் ஆண்டு தனுஷை வைத்து காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கி இவருக்கும் தனுஷுக்கும் ஒரு தனித் துவக்கத்தை கொடுத்து மாபெரும் வெற்றி அடையச்செய்தது.

இந்த திரைப்படங்களுக்குப் பின் தனுஷுக்கு பல முக்கிய திரைப்படங்கள் கிடைப்பதற்கு செல்வராகவனின் பங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும்   இந்த படத்திற்கு  யுவன்  இசையமைப்பாளராகவும்  அரவிந் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருந்த நிலையில் இந்த படத்திற்கான  போட்டோஷூட் முடிவடிந்திருந்தது .ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த  திரைப்படம் கைவிடப்பட்டது.ஆனால் தற்போது இப்படத்தின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது

 

 

Share this post with your friends