வெற்றி மாறன் பட்டறையில் இருந்து வந்தவர் தான் லா. ராஜ்குமார். இவரின் இயக்கத்தில் வெளியான படம் தான் “உதயம் NH 4”. கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றது.
தற்போது, இவரின் இயக்கத்தில் உருவாகி வரும் வெப் தொடர் தான் “பேட்டைக்காளி”. வெற்றி மாறன் இந்த படத்தை வழங்குகிறார். ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப் பட்டுள்ளது. இப்படத்தில் கிஷோர், கலையரசன், சதீஷ், ஆன்டனி போன்ற பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ஆவலை கிளறி உள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையில் அவரின் குரலில் படத்தின் டைடல் ட்ராக் நேற்று வெளியானது.
இந்த வெப் தொடரை ஆஹா ஒடிடி தளம் வெளியிட உள்ளது குறிப்பிடதக்கது.
லிங்க் : https://youtu.be/vraH7WbmVpc