Mnadu News

வெளியீட்டுக்கு முன்னரே சலார் செய்த வசூல் சாதனை!

இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்து வரும் திரைப்படம் சலார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தின் டீசர் கடந்த ஜூலை 06 ஆம் தேதி வெளியாகி மாஸ் வரவேற்பை பெற்றது. சுமார் ₹200 கோடி பட்ஜெட்டில், ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் வெளியாகிறது.

பாகுபலிக்கு வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான படங்கள் வசூலை குவித்தாலும், அவை எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்பது தான் நிதர்சனம்.

ஆனால், அதை எல்லாம் உடைக்க “சலார்” திரைப்படம் கே.ஜி.எப் போல நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர்கள் பிரபாஸ், பிரித்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கின்றனர்.

இந்நிலையில், படம் வெளியீடுக்கு முன்பே ₹200 கோடி வசூல் செய்துள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஆம், படத்தின் ஓ.டி.டி உரிமைகள் ₹200 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்து உள்ளது.

Share this post with your friends