கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் ஷானவாஸ் என்பவரது மகன் நஜாப் (16). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் டுட்டோரியல் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இந்த கல்லூரியிலிருந்து 6 ஆண்கள், 17 பெண்கள் என மொத்தம் 23 மாணவர்கள் குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர்.
அப்போது மாத்தூர் தொட்டி பாலத்தின் கீழ் பகுதியில் சப்பாத்து பாலத்தில் கீழே உள்ள ஆற்றில் இறங்கி இரண்டு மாணவர்கள் குளிக்க சென்ற பொழுது மாணவன் நஜாபை ஆற்று வெள்ளம் இழுத்துச் சென்றுள்ளது. இதை பார்த்த உடன் இருந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து இந்த மாணவனை மீட்கும் பணியில் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.