Mnadu News

வெள்ளத்தில் மிதக்கும் ஆஸ்திரேலியா! மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்!

கடந்த சில தினங்களாக ஆஸ்திரேலியாவில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருவதால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக கருதப்படும் விக்டோரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீதிகளில் நிறுத்தப்பட்ட கார்கள் வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கி உள்ளன.

சுமார் 500 வீடுகள் விக்டோரியாவில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், சுமார் 120 சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று மீட்புக் குழுவினர் தகவல் கொடுத்துள்ளனர். இதனால், டாஸ்மானியா பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள்,மிதவை படகுகள் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 1,000 பேர் தங்கும் வசதி கொண்ட கொரோனா தனிமைப்படுத்தல் மையம் ஒன்று மக்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Share this post with your friends