Mnadu News

வெள்ளப்பெருக்கு: குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை காரணமாக அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதினால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தென்றல் தழுவும் தென்காசியில் அமைந்திருக்கும் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் மட்டுமே குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஐந்தருவியில் மிதமாக அளவில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க அனுமதிக்க பட்டனர்.

Share this post with your friends